சொந்த ஊர் சென்ற நயன்தாரா!

நீண்ட நாள் காதல் ஜோடியாக சுற்றி திரிந்த நயன் – விக்கி சில தினங்களுக்கு முன் கல்யாண ஜோடி ஆனார்கள். இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.
அதன் பிறகு மறுநாளே திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அதற்கு மறுநாள் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று விமானம் மூலம் கொச்சிக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து நயன்தாரா பிறந்த ஊரான திருவல்லாவுக்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்கள். இதற்கு இடையில் கொச்சியில் மலையாள பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பும் அவர்கள் அவரவர் பணியாற்றும் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

Share.