சூர்யா, விஜய் சேதுபதியை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியின் படமும் OTT-யில் ரிலீஸாகுதாமே!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், சில தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் அக்டோபர் 30-ஆம் தேதியும், விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’ படம் அக்டோபர் 2-ஆம் தேதியும் OTT-யில் ரிலீஸாக உள்ளது. தற்போது, பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ‘ஜெயம்’ ரவி நடித்துள்ள ‘பூமி’ என்ற படமும் OTT-யில் ரிலீஸாகப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம். இயக்குநர் லக்ஷ்மன் இயக்கி உள்ள இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

Share.