பயந்து ஓடும் நயன்தாராவை துரத்தும் VJS… மீண்டும் லீக்கானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் காட்சி!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம் மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வருகிறார்.

‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் தயாரிக்கும் இந்த படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி, நயன்தாரா இடம்பெறும் ஒரு காட்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்காகியுள்ளது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. சமீபத்தில், இதேபோல் பஸ்ஸில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று லீக்கானது குறிப்பிடத்தக்கது.


Share.