மலையாளத்தில் மெகா ஹிட்டான படம்… தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மலையாள திரையுலகில் இந்த ஆண்டு (2021) வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்த படத்தை இயக்குநர் ஜோ பேபி இயக்கியிருந்தார். இதில் நிமிஷா சஜயன், சூரஜ் வெஞ்சரமூடு, டி.சுரேஷ் பாபு, ரமாதேவி, சித்தார்த்த சிவா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. சமீபத்தில், இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கண்ணன் கைப்பற்றினார்.

இயக்குநர் ஆர்.கண்ணனே இயக்கும் இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். தற்போது, இதில் ஹீரோயினாக நடிக்க பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் காரைக்குடியில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதும் இந்த படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யவுள்ளாராம்.

Share.