ஐஸ்வர்யா ராஜேஷ் சிபாரிசில் சாய் பல்லவி !

கஸ்தூரி மான் , தாம் தூம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் . தமிழ் , தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சாய் பல்லவிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . நேரடி தமிழ் திரைப்படம் நடிப்பதற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் . பிரேமம் படத்திற்கு பிறகு களி என்கிற படத்தில் நடித்தார் அதன் பிடா என்கிற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார் . தமிழில் தியா என்கிற படத்தில் நடித்தார் , நடிகர் தனுஷுடன் இணைந்து மாறி 2 , சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார் .

நீண்ட இடைவேளைக்கு பிறகு சாய் பல்லவி தற்போது தமிழ் படத்தில் நடித்துள்ளார் . அந்த படத்தின் பெயர் கார்கி . கவுதம் இராமச்சந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை சக்தி பிலிம் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகிறது .வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் சாய் பல்லவிக்கு இந்த படத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரிந்துரை செய்துள்ளார் .இந்த தகவலை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் . இந்த கதையையும் கதாபாத்திரத்தையும் கேட்டதும் தன்னைவிட இன்னும் பெரிய நடிகை நடித்தால் தான் கதாபாத்திரம் வலுவாக இருக்கும் என்று கூறியதாகவும் அவரே சாய் பல்லவி பெயரை பரிந்துரை செய்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த செயல் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது .

Share.