சூப்பர் ஹிட்டான ‘கனா’… இந்த படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையுலகில் என்ட்ரியான புதிதில் சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அட்டகத்தி’ என்ற படத்தில் தான் ஆடியன்ஸ் மனதில் ரெஜிஸ்டர் ஆனார். அதன் பிறகு நடித்து 2015-ஆம் ஆண்டு ரிலீஸான ‘காக்கா முட்டை’ என்ற திரைப்படம் தான் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கனா’.

சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.