நடிகர் தனுஷை பிரிந்த பிறகு முதல் முறையாக காதல் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 10 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இரவு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் புதிய பாடல் வீடியோவின் டீசர் ரிலீஸானது. இதில் ஐஸ்வர்யாவின் பெயர் ‘ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’ என்று மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘காதல்’ குறித்து ஐஸ்வர்யா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “காதல் பொதுவானது. நான் என்னுடைய அம்மா, அப்பா மற்றும் குழந்தைகளை நேசிக்கிறேன். எப்பவுமே நாம் அன்பை கட்டுப்படுத்தக் கூடாதுன்னு நான் நினைப்பேன்” என்று கூறியுள்ளார்.

Share.