‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த அஜித்… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விஜய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

1996-யில் ரிலீஸான தமிழ் படம் ‘காதல் கோட்டை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அகத்தியன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘தல’ அஜித் நடித்திருந்தார். ஆனால், அகத்தியனின் முதல் சாய்ஸாக இருந்தது விஜய் தானாம். பின், கால்ஷீட் பிரச்சனையால் விஜய்யால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.