நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடித்த அஜித்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

 

இந்நிலையில், சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1995-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ஆசை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வஸந்த் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘தல’ அஜித் நடித்திருந்தார். ஆனால், வஸந்தின் முதல் சாய்ஸாக இருந்தது சூர்யா தானாம். பின், சில காரணங்களால் சூர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.