வரலாறு செட்டில் நடந்த பரப்பான சம்பவம் !

நடிகர் அஜித் நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான படம் வரலாறு . இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் . நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார் .பி.சி.ஸ்ரீராம்,பிரியன் ,ஆர்துர் வில்சன் ஆகியோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார் .ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

20 அக்டோபர் 2006 அன்று தீபாவளி சீசனில் சிலம்பரசனின் வல்லவன், எஸ்.பி.ஜனநாதனின் இ, சரணின் வட்டம் மற்றும் சரத்குமாரின் தலைமகன் ஆகிய படங்களுடன் இந்த படம் வெளியானது . மேலும் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த படம் மாறியது . சென்னை மாவட்டத்தில் 25 திரைகள் உட்பட உலகம் முழுவதும் 300 திரைகளில் வரலாறு படைத்தது . இது 175 நாட்கள் ஓடி அஜித் குமாரின் அவரது மிகப்பெரிய வசூல் படமாக அமைந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் செட்டில் நடந்து உள்ளது .அப்போது ராமோஜி ராவ் செட்டின் உரிமையாளர்களின் தொலைக்காட்சி வரலாறு படத்தின் படப்பிடிப்பின் பொது படப்பிடிப்பை வீடியோ எடுத்துள்ளனர் . இதை பார்த்த நடிகர் அஜித் அவர்களை கூப்பிட்டு யார் நீங்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு நாங்கள் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் வைத்திருக்கும் தொலைக்காட்சி சார்ந்தவர்கள் என்று சொல்ல நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் எங்களது அனுமதி இல்லாமல் படம் எடுத்தது தவறு உடனடியாக இங்கே இருந்து வெளியே போங்கள் என்று கோபமாக கூறியுள்ளார் . இந்த தகவலை வரலாறு படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார் .

Share.