“என்னை ‘தல’ என்றோ, வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம்”… நடிகர் அஜித் அறிக்கை!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்துக்கான ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2022) ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் அஜித் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

‘தல’ என்றோ, வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share.