அஜித்துடன் முதல் முறையாக இணையும் நடிகை?

நடிகர் அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை . மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது . இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் படத்தில் உள்ள சண்டை காட்சிகளை பாராட்டி இருந்தார்கள் .

இந்த படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜித் ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது . இதை உறுதி செய்து உள்ளது தயாரிப்பு நிறுவனம் . இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்துள்ளார் .

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் . வருகின்ற தீபாவளிக்கு இந்த படத்தை திரையிடலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள் . மேலும் இந்த படத்தில் நடிகர் கவின் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது .

இந்த நிலையில் நடிகர் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.