‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினாரா அஜித்?… வைரலாகும் ஸ்டில்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார். ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ரஜினியும், அஜித்தும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டது போல் ஒரு ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரஜினி மற்றும் அஜித் தரப்பில் விசாரிக்கையில் இது உண்மை அல்ல FANMADE ஸ்டில் என தெரிவித்தார்கள்.

Share.