அஜித் – சிம்ரன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அவள் வருவாளா’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தும், 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனும் இயக்க உள்ளனர்.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அவள் வருவாளா’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராஜ்கபூர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.8 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.