அஜித் – சிவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வீரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளாராம்.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வீரம்’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நாசர், சந்தானம், விதார்த், பாலா, அதுல் குல்கர்னி, அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.93 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.