விஜய்யை சந்திப்பாரா அஜித் ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து கொண்டு இருக்கிறது . இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் தொடங்க இருக்கிறது . இந்நிலையில் இன்று நடிகர் அஜித் விமான நிலையத்தில் மக்களோடு மக்களாக பயணிக்கும் வீடியோ தற்போது வைராகி வருகிறது .

ஏற்கனவே விஜய் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் உள்ளார் எனவே இருவரும்
சந்தித்துக் கொள்வார்களா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் .

Share.