ஒரே நாளில் வெளியான விஜய் அஜித் சூர்யா திரைப்படம்

நடிகர் விஜய், அஜித், சூர்யா இவுங்க மூணு பெரும் தமிழ் சினிமாவோட முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர் . இந்த மூன்று நடிகர்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது . ஆரம்ப காலகட்டத்தில்

நடிகர் விஜய்யும் , அஜித்தும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தார்கள் .

அதன் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யும் அஜித்தும் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் நடிப்பதாக இருந்தது . ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து நடிகர் அஜித் விலகி விட்டார் . அதன் பிறகு

அந்த படத்தில் விஜய்யுடன் நடிகர் சூர்யா நடித்தார் . சூர்யாவிற்கு அது முதல் படம் . இந்த படம் சுமாரான படமாக அமைந்தது .

இந்த மூன்று நடிகர்களும் மீண்டும் இனைந்து நடிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு . மூன்று பேர் நடித்த படங்களும் ஒரே நாளில் வெளியாகுவதற்கும் வாய்ப்பு குறைவு . ஆனால் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டும் மூன்று பேர் நடித்த படம் 2001ம் வெளியானது .

முருகதாஸ் இயக்கத்தில் தீனா படமும் , சித்திக் இயக்கிய பிரண்ட்ஸ் திரைப்படமும் ஒன்றாக வெளியானது .

2001-ம் ஆண்டு வெளியான இந்த இரண்டு திரைப்படமும் மிக பெரிய வெற்றியை அடைந்தது .இந்த இரண்டு படமுமே இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது .

Share.