‘#3YearsOfNerkondaPaarvai’ … அஜித் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியிருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி, ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் சூப்பர் ஹிட்டானது. நேற்றுடன் (ஆகஸ்ட் 8-ஆம் தேதி) இந்த படம் வெளி வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#3YearsOfNerkondaPaarvai’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த படம் உலக அளவில் ரூ.134 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.