அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?… வருத்தத்தில் ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி சில நாட்கள் தொடர்ந்து நடந்தது. விரைவில் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை டெல்லியில் ஆரம்பிக்க ப்ளான் போட்டு வந்தனர் படக்குழுவினர். தற்போது, ‘கொரோனா’ பிரச்சனையால் டெல்லியில் ஷூட்டிங் நடத்த அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

Share.