பண்டிகை தினத்தில் வெளியாகும் சிம்பு படம் !

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக அமைந்தது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் .

இந்நிலையில் நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் . கர்நாடகா மாநிலம் பெல்லாரி எனும் ஊரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக அயல்நாடு சென்று உள்ளார் . இதனால் பத்து தல படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது .

இந்நிலையில் பத்து தல படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையிடலாம் என்ற திட்டத்தில் படக்குழு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .மேலும் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி கொண்டு இருக்கும் படமும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது . இதனால் சிம்புவின் பத்து தல படமும் அஜித் படமும் ஒரே நாளில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது .

Share.