அகில் – மம்மூட்டி இணைந்து நடித்துள்ள ‘ஏஜென்ட்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அகில். முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் அகில்.

இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய தெலுங்கு படம் ‘ஏஜென்ட்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டி இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக சாக்ஷி வைத்யா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோலில் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி நடித்துள்ளார். ஸ்பை த்ரில்லர் படமான இதனை ‘AK எண்டர்டெயின்மெண்ட்ஸ் – சுரேந்தர் 2 சினிமா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

தற்போது, இப்படத்தின் டீசரை அகில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.