நம்ம அக்ஷரா ஹாசனா இது?… கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையாகவும் இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் அக்ஷரா ஹாசன். இவர் அறிமுகமான முதல் படத்திலையே இரண்டு சூப்பர் நடிகர்களான அமிதாப் பச்சனும் – தனுஷும் இணைந்து நடித்திருந்தார்கள். அது தான் ஹிந்தி படமான ‘ஷமிதாப்’.

‘ஷமிதாப்’ படத்துக்கு பிறகு அக்ஷரா ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘லாலி கி ஷாதி மெயின் லாட்டூ தீவானா (ஹிந்தி), விவேகம் (தமிழ்), கடாரம் கொண்டான் (தமிழ்)’ என படங்கள் குவிந்தது. இதன் பிறகு ‘ஃபிங்கர்டிப்’ என்ற வெப் சீரிஸில் நடித்தார் அக்ஷரா ஹாசன். இப்போது இவர் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தமிழ் படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறாராம்.

Akshara Haasan's Hot Photoshoot1

சமீபத்தில், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள ஒரு புதிய தமிழ் படம் குறித்த அறிவிப்பு வந்தது. ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார். ‘ட்ரெண்ட் லவுட்’ நிறுவனம் தயாரித்துள்ள இதில் நடிகை அக்ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாடகி உஷா உதுப் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை அக்ஷரா ஹாசன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.1

1

Akshara Haasan's Hot Photoshoot (1)

2

Akshara Haasan's Hot Photoshoot (2)

3

Akshara Haasan's Hot Photoshoot (3)

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

 

View this post on Instagram

 

A post shared by Akshara Haasan (@aksharaa.haasan)

Share.