குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அல்லு அர்ஜுன்… வைரலாகும் வீடியோஸ்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘புஷ்பா’. இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், தனஞ்ஜெய், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனுஷயா பரத்வாஜ் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாகவும், முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் அவரது மனைவி சினேகா ரெட்டி மற்றும் மகன், மகளுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.