அல்லு அர்ஜுன் – ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள ‘புஷ்பா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’. இதன் முதல் பாகம் இன்று (டிசம்பர் 17-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளதாம். இதில் ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்ஜெய், ராவ் ரமேஷ், அனுஷயா பரத்வாஜ், அஜய் கோஷ் நடித்துள்ளனர். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலுக்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடனமாடியிருக்கிறார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.