விளம்பர படத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன் !

இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் பலர் சினிமாவில் நடிப்பதும் மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர் . சினிமா படங்களில் வாங்கும் சம்பளத்திற்கு மேலாக விளம்பரங்களில் நல்ல சம்பளத்தை பெறுகிறார்கள் நடிகர்கள் . முன்னணி நடிகர்களை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைப்பது மூலம் அவரது ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடலாம் என்று முன்னணி நிறுவனங்கள் நினைக்கிறார்கள் .

அந்த வகையில் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் , என அனைத்து மொழிகளிலும் உள்ள நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் மிக பெரிய நட்சத்திரமாக இருக்கிறார் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

அல்லு அர்ஜுனும் தொடர்ந்து விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார் .இந்நிலையில் பிரபல புகையிலை நிறுவனம் ஒன்று அவரை அணுகி விளம்பரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் நடிகர் அல்லு அர்ஜுன் அதற்கு சற்றும் யோசிக்காமல் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். தான் இந்த புகையிலை விளம்பரத்தில் நடித்தால் அவரது ரசிகர்கள் தப்பான வழியில் சென்று விடுவார்கள் என்ற காரணத்தால் அவர் மறுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது .

Share.