5 மொழிகளில் தயாராகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… ரிலீஸானது புதிய ப்ரோமோ!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக நடிகர் அல்லு அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், தனஞ்ஜெய், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனுஷயா பரத்வாஜ் நடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார். தற்போது, இப்படத்தின் அல்லு அர்ஜுன் கேரக்டர் டீசருக்கான ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர். முழு டீசரையும் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 6:12 மணிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.