அமலா பாலின் பர்த்டே ஸ்பெஷல்… ரிலீஸானது ‘கேடவர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சமீபத்தில், அமலா பால் நடித்த ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் வெளியானது. சயின்ஸ்-ஃபிக்ஷன் க்ரைம் த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கியிருந்தார். இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்திருந்தார்.

மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸை ‘ஆஹா’ OTT தளத்தில் பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டினார்கள். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கேடவர்’ என்ற படத்தை அமலா பாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அமலா பால் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறாராம். இந்த படத்தை அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கி கொண்டிருக்கிறார். இன்று (அக்டோபர் 26-ஆம் தேதி) அமலா பாலின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இப்போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.