அமலா பாலின் த்ரில்லர் படமான ‘கடாவர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்), ‘டீச்சர்’ (மலையாளம்) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கடாவர்’ என்ற படம் நேற்று (ஆகஸ்ட் 12-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இந்த படத்தை அமலா பாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அமலா பால் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.

இதனை இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோலில் ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். தற்போது, இந்த படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.