ரஜினியின் ‘2.0’-வுக்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் எமி ஜாக்சன். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மதராசபட்டினம்’. ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

‘மதராசபட்டினம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை எமி ஜாக்சனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, 2.0’ என தமிழ் படங்கள் குவிந்தது.

எமி ஜாக்சன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘2.0’.

2018-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக நடிகை எமி ஜாக்சன் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.