வேர்ல்ட் ஆஃப் ‘சார்பட்டா பரம்பரை’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த வீடியோ!

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா. இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

இப்போது பா.இரஞ்சித் இயக்கி கொண்டிருக்கும் புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சூப்பரான வீடியோவை இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும், படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. இந்த படத்தை தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1

2

3

4

5

6

Share.