விரைவில் மோகன் ராஜாவின் அந்தாதூன் ரீமேக்!

இந்தியில் ஸ்ரிராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமான “அந்தாதூன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் மோகன் ராஜா வரும் நவம்பரில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், படப்பிடிப்பிற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை மூன்று மாத காலத்திற்குள் முடித்து மார்ச் அல்லது ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் பிரசாந்த் உடற்பயிற்சி செய்து மெருகேற்றி வருவதாகவும், பியானோ கற்று வருவதாகவும், ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்தும் தகவல் வந்துள்ளது.

Share.