அடேங்கப்பா… ‘அந்தகாரம்’ பட ஹீரோயின் பூஜா ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு இவ்ளோவா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ராமச்சந்திரன். ஆரம்பத்தில் ‘SS மியூசிக்’ டிவி சேனலில் தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் ‘காஞ்சனா’ என்ற சீரியல் மூலம் நடிகையாக மாறினார். அதன் பிறகு நடிகை பூஜா ராமச்சந்திரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, நண்பேன்டா, காஞ்சனா 2, பீட்சா, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், களம், அந்தகாரம்’ என படங்கள் குவிந்தது. 2010-யில் பூஜாவுக்கும், பிரபல VJ க்ரேயிக்கும் திருமணம் நடைபெற்றது.

பின், க்ரேயிக்குடன் விவாகரத்து பெற்றுக்கொண்டு 2019-ஆம் ஆண்டு நடிகர் ஜான் கோக்கனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பூஜா. ஜான் கோக்கன் ‘கே.ஜி.எஃப் 1 & 2, சார்பட்டா பரம்பரை, வீரம், ஒஸ்தி’ போன்ற பல படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடிகை பூஜா ராமச்சந்திரனின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.

Share.