‘பிசாசு 2’ ரிலீஸாவதற்கு முன்பே தனது சம்பளத்தை உயர்த்திய நடிகை ஆண்ட்ரியா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சரத்குமாருடன் தான். அது தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘வட்டம், மாளிகை, கா, நோ என்ட்ரி, பிசாசு 2, அனல் மேலே பனித்துளி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பிசாசு 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

காரணம் இதன் இயக்குநர் மிஷ்கின் தான். ஆண்ட்ரியாவும் இந்த படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறாராம். ஆகையால், தற்போது அவரிடம் கால்ஷீட் கேட்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளம் ரூ.1.50 கோடி என்று சொல்லி வருகிறாராம் ஆண்ட்ரியா.

Share.