நடிகர் விஜய் குறித்து ஆண்ட்ரியா ஜெரெமையாவின் கருத்து!

2007ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஆண்ட்ரியா ஜெரெமையா.

பின்பு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா ஜெரெமையா தற்போது ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததற்கு பின்பு விஜய் பற்றி தனக்கு மிகுந்த மதிப்பு வந்துள்ளதாகவும் அவரை கண்டு வியப்பதாகவும் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா கூறியுள்ளார். ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து எந்தவித செய்தியையும் வெளியிடுவதற்கு ஆண்ட்ரியா மறுத்துள்ளார்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற 2021 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

Share.