அடேங்கப்பா… ‘வடசென்னை’ படத்தில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சரத்குமாருடன் தான். அது தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘வட்டம், மாளிகை, கா, நோ என்ட்ரி, பிசாசு 2’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஆண்ட்ரியாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வடசென்னை’. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இதனை இயக்கியிருந்தார். இதில் ஆண்ட்ரியா ‘சந்திரா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, ஆண்ட்ரியா ‘வடசென்னை’-க்காக ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.