செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள அனிகா சுரேந்திரன் – அலறும் இணையதளம்!

அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் இந்த லாக்டவுன் தொடங்கியது முதலே விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய அனிகா சுரேந்திரன், தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

தற்போது அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக முயற்சித்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் இதுபோன்ற விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் இவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

தமிழிலும் ஹீரோயினாக வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறாராம். விரைவில் தமிழிலும் இவர் ஹீரோயினாக வலம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் குதிரையுடன் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி செம ஸ்டைலாக அதை வெளியிட்டுள்ளார். அனைவரும் அனிகாவின் இந்த புகைப்படங்களை வைரலாகி அவர் ரசித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CFxB47ogyJ4/?igshid=d1l6wxzl2b3b

Share.