அனிகா சுரேந்திரனின் அசத்தல் போட்டோஷூட்!

அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் இந்த லாக்டவுன் தொடங்கியது முதலே விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய அனிகா சுரேந்திரன், தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தற்போது இவர் பதிவிட்டு வரும் சில புகைப்படங்கள் வயதிற்கு மீறிய கவர்ச்சியாக உள்ளது என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த வரிசையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் வாழையிலையை மட்டுமே உடையாகக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதற்கு பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக முயற்சித்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் இதுபோன்ற விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் இவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

தமிழிலும் ஹீரோயினாக வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறாராம். விரைவில் தமிழிலும் இவர் ஹீரோயினாக வலம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது திருவோணம் பண்டிகை சில தினங்களில் வருவதை முன்னிட்டு மலையாள சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதை தற்போது வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்திரன்.

Share.