மீண்டும் தனுஷுடன் கூட்டணி அமைக்கும் அனிருத்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘சன் பிக்சர்ஸ்’!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் பிறகு சில மாதங்களாக ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

சமீபத்தில், ‘சன் பிக்சர்ஸ்’-க்கு ஒரு படம் பண்ண ஒப்புக் கொண்டார் தனுஷ். இந்த படத்தை மித்ரன்.ஆர்.ஜவஹர் தான் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது, இப்படத்திற்கு இசையமைக்க ‘ராக்ஸ்டார்’ அனிருத் ஒப்பந்தமாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, தனுஷ் நடித்த ‘3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன்’ ஆகிய நான்கு படங்களுக்கு அனிருத் இசையமைத்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.