எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ‘RRR’-க்காக அந்த விஷயத்தை செய்த அனிருத்!

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ ஜெட் ஸ்பீடில் இயக்கி வருகிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இந்த படத்தை இந்த ஆண்டு (2021) அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த படத்துக்கான புரொமோஷனல் பாடலை டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் பாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share.