‘பிக் பாஸ் 4’-யில் அனிதா எலிமினேட்டான பிறகு இன்ஸ்டாவில் போட்ட முதல் போஸ்ட்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது, அனிதா சம்பத் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இதுக்கு மேல என்ன வேணும்.. யாருக்கும் சொம்பு தூக்காம 84 நாட்கள் உண்மையா இருந்துட்டு வந்துருக்கேன்.. No safe game, No favouritism, No paid p.r pages, No abusive comments from my pages to other contestants. Pointed out my close ones mistakes too And iam proud of that. Finals வரைக்கும் இருந்தேன்னு சொல்லிக்கிற பெருமைய விட.. இருந்த வரைக்கும் விளையாட்ட twist பண்ணதுல எனக்கும் பங்கு இருக்குனு சொல்லிக்கிறத ரொம்ப பெருமையா நெனக்கிறேன். எனக்கு கடைசி வரைக்கும் vote பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

அழுகையும் கோபமும் எல்லாருக்கும் வரும்.. நீங்க Biggboss வீட்டுக்குள்ள போனாதான் அது புரியும். ஒரு sensitive person அவ்ளோ stressful வீட்ட handle பன்றது எவ்ளோ கஷ்டம்னு. Six அடி six அடினு வீட்டுக்குள்ள இருந்து கத்தலாம்.. ஆனா Sixer அடிக்கிறதோட கஷ்டம் batsmanக்கு தான் புரியும்.. “neutral audience” எல்லாருக்கும் மிக்க நன்றி. Unga comments and posts பாத்தேன்.. i was really happy and gained so much of confidence about my game.. நான் இப்படிதான்.. உள்ளேயும் வெளியேயும்.. Audience ah impress பண்ண உடனே sorry கேட்டு நடிக்க தெரியாது.. போலியா சிரிக்க தெரியாது.. கோபத்த evictionல இருந்து தப்பிக்க அடக்க தெரியாது.. நான் நானா இருந்தேன். To all those who hurt the other contestants in the name of “fan page”.. abused the evicted contestants family members with unbearable filthy words. உங்களுக்கு காட்டுறது வெறும் ஒரு மணி நேரம். நாங்க பாக்குறது 24 மணி நேரம். No one is perfect.. No one can be right all the time” என்று கூறியுள்ளார்.

Share.