அடேங்கப்பா இத்தனை கோடியா?… ரிலீஸான 7 நாட்களில் ‘அண்ணாத்த, எனிமி’ செய்த வசூல் சாதனை!

திரையரங்குகளில் கடந்த வாரம் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ மற்றும் ‘எனிமி’ என இரண்டு படங்கள் வெளியானது. இதில் ;அண்ணாத்த’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

‘எனிமி’ படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடித்திருந்தார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடித்திருந்தார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தார்.

மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். தற்போது, ‘அண்ணாத்த’ மற்றும் ‘எனிமி’ ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் உலக அளவில் ‘அண்ணாத்த’ ரூ.200 கோடியும், ‘எனிமி’ ரூ.23.7 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.