“அண்ணாத்த” படத்தின் சர்ப்ரைஸ் ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகும்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகிற ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவரது அடுத்த படமான “அண்ணாத்த” எப்போது வெளிவரும் என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அண்ணாத்த”. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு முறைப் பெண்ணாக குஷ்பு மற்றும் மீனா நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஹைதராபாத்தில் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதில் ரஜினி நடிப்பில் 60 சதவீத படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரஜினி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும், மேலும் ரஜினி பிறந்தநாளன்று இந்தப் படத்தை குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று சர்ப்ரைஸாக வெளியாக உள்ளதாகவும் தகவலை தெரிவித்துள்ளார்கள்.

Share.