அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு SPB பாடிய பாடல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. அதன் பின்னர் இந்த திரைப்படத்தின் வேலைகள் தொடங்கி விட்டதாகவும் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் பஞ்ச் டயலாக்குகளை ரஜினிகாந்த் எழுதியதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும், இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்யும்போது தனக்கு அவருடன் கிடைத்த அனுபவம் பெரிது என்றும் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழும் குரலும் என்றும் மறையாது என்றும் அவர் குறிப்பிட்டுருக்கிறார். சமூக வலைத்தளம் முழுவதும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இரங்கல் ஒலிக்கிறது!

Share.