100 மில்லியன் கிளப்பில் இணைந்த அரபிக் குத்து!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட் .இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார் . கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

படத்திற்கு முன்பாக வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அரபிக் குத்து என்கிற பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் . அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் இந்த பாடலை பாடி இருந்தார்கள் . இந்த பாடலுக்காக நெல்சன் , அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் செய்த ப்ரோமோ வீடியோ அனைவரையும் கவர்ந்து இருந்தது .

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அரபிக் குத்து லிரிக் வீடியோவை இதுவரை 400 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது . குறுகிய காலகட்டத்தில் இந்த பாடல் 400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது .

இந்நிலையில் அரபிக் குத்து பாடலின் வீடியோ தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரென்டிங்கில் உள்ளது.

Share.