திருமணத்தை அறிவித்த நடிகை !

நடிகர் பரத் கதாநாயகனாக நடித்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு . இந்த படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா . இவர் பார்பதற்கு நடிகை அசின் போலவே இருப்பார்‌. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை பூர்ணா தனது வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, “குடும்பத்தினரது ஆசீயுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை பூர்ணா திருமணம் செய்ய இருக்கும் நபர் பெயர் சானித் ஆசிப் அலி. துபாயில் தொழிலதிபராக உள்ளார். தற்போது இருவீட்டாரது சம்மதத்துடன் நிச்சயம் நடந்துள்ளது.

Share.