தனது அடுத்த படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்த சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்கிற ஒரு சிறந்த நடிகர் . சமீபத்தில் இவர் நடிச்ச எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்கில் வெளியானது . கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்று இருந்தாலும் வசூல் ரீதியா லாபமான படமா அமஞ்சது . இவர் அடுத்ததா பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிச்சிட்டு இருக்காரு .அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் .

சூர்யா நல்ல படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தன்னோட 2D தயாரிப்பு மூலம் நல்ல நல்ல படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார் . இவர் தயாரிப்பில் உருவான பொன் மகள் வந்தால் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியா அமேசான் ஓ .டி .டியில் வெளியிட்டார் . அதனை தொடர்ந்து சூரரை போற்று , ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் , உடன்பிறப்பே , ஜெய் பீம் என வரிசையாக அமேசான் நிறுவனத்துக்கு படத்தை விற்று நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட்டார் . இதில் சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் திரைப்படம் மிக பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

இதனை தொடர்ந்து 2D தயாரிப்பில் அடுத்து ஒரு படம் அமேசானில் வெளியாக இருக்கிறது . ஓ மை டாக் என்று பெயரிட பாட்டுல அந்த படத்தில் நடிகர் விஜயகுமார் , அருண் விஜய் , அவரது மகன் நடித்துள்ளனர் .இந்த ஏப்ரல் 21ம் தேதி அமேசான் ஓ.டி.டியில் வெளியிட போவதாக சூர்யா அறிவித்துள்ளார் . படத்தின் பெயரிலே நாய் இருப்பதால் இந்த படம் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை பற்றி பேசும் என்று நம்பலாம் .படத்தின் ட்ரைலர் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.