பாலிவுட்டில் நெல்சன் திரைப்படம்!

தமிழில் 2018ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான படம் கோலமாவு கோகிலா.டார்க் காமெடி படமாக வெளியான இந்த திரைப்படம் இ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பாடல் மற்றும் காமடி காட்சிகள் அனைவராலும் இரசிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக தமிழ் படங்கள் பல பாலிவுட் சினிமாவில் ரீமேக் ஆகி வருகின்றன.
அந்த வகையில் தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தை ஹிந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீ மேக் செய்துள்ளார்கள். சித்தார்த்சென் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீதேவி- போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தில் நயன்தாரா வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜூலை 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share.