ஆந்தாலஜி படமான ‘புத்தம் புதுக் காலை’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில், தமிழில் உருவாகி உள்ள புதிய ஆந்தாலஜி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதற்கு ‘புத்தம் புதுக் காலை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இதில் ஐந்து குறும்படங்கள் இருக்கிறதாம்.

பிரபல இயக்குநர்களான கெளதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர். இதில் ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்.எஸ்.பாஸ்கர், ரித்து வர்மா, ஸ்ருதி ஹாசன், சுஹாசினி மணிரத்னம், அனுஹாசன், காத்தாடி ராமமூர்த்தி, ஆண்ட்ரியா, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகுமாம். தற்போது, இதன் ட்ரெய்லரை இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளனர்.

Share.