படுக்கையில் படுத்தபடி போட்டோஷூட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்… குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது. இப்போது, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் தமிழில் ‘தள்ளிப் போகாதே’ மற்றும் தெலுங்கில் ’18 பேஜெஸ்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

Anupama Parameswaran's New Photoshoot Stills1

இதில் ‘நின்னு கோரி’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தள்ளிப் போகாதே’வில் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து அதர்வா, அமிதாஷ் பிரதான், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்நிலையில், அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

Anupama Parameswaran's New Photoshoot Stills (1)

2

Anupama Parameswaran's New Photoshoot Stills (2)

Share.