‘பாகுபலி’-யில் ‘தேவசேனா’ ரோலில் மாஸ் காட்டிய அனுஷ்கா… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் அறிமுகமான முதல் படத்தின் ஹீரோ மாதவன். ‘இரண்டு’ என்ற இந்த படத்துக்கு சுந்தர்.சி தான் இயக்குநர். இப்படத்தில் இடம்பெற்ற ‘மொபைலா மொபைலா’ என்ற பாடல் தான் அனுஷ்காவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

அதன் பிறகு இரண்டாவது தமிழ் படமே முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் அமைந்தது. அந்த படம் தான் ‘வேட்டைக்காரன்’. ‘வேட்டைக்காரன்’-க்கு பிறகு வந்த ‘சிங்கம்’ மெகா ஹிட்டானதும் நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி 1&2’ என படங்கள் குவிந்தது.

அனுஷ்கா ஷெட்டி தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில், அனுஷ்கா ஷெட்டியின் புதிய திரைப்படமான ‘சைலன்ஸ்’ ‘அமேசான் ப்ரைம்’-யில் வெளியானது. இப்போது அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் புதிய தெலுங்கு திரைப்படம் உருவாகி வருகிறது. ‘UV கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் பி.மகேஷ் பாபு இயக்குகிறார்.

அனுஷ்காவின் கேரியரில் மிக முக்கியமான படங்கள் ‘பாகுபலி 1 & 2’. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இதனை இயக்கியிருந்தார். இதில் அனுஷ்கா ‘தேவசேனா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரானா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, நடிகை அனுஷ்கா ‘பாகுபலி 1’-க்காக ரூ.3 கோடியும், ‘பாகுபலி 2’-க்காக ரூ.5 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.